எப்போதாவது நமக்கு கிடைக்கும் ஒரு சில படங்களில் காணப்படும் எழுத்து வகைகள் நம்மை ரசிக்க வைக்கும் அளவில் காட்சி தரும். இந்த பாண்ட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவோம். ஆனால் அந்த பாண்ட் பெயர் என்னவென்று தெரியாமல் எப்படி தேடுவது? இதற்கு வழி காட்டுகிறது ஓர் இணைய தளம். அதன் முகவரி: http://www.myfonts.com/WhatTheFont/
இந்த தளம் எப்படி செயல்படுகிறது? வெகு எளிது.
முதலில் எந்த டெக்ஸ்ட்டில் உள்ள எழுத்து அல்லது படத்தில் இணைந்த எழுத்து குறித்து சந்தேகம் உள்ளதோ அதன் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்கேன் செய்திடாமல் பட பைலாக இருந்தால் இன்னும் வசதி. இந்த தளத்தைத் திறந்து உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்கேன் செய்யப்பட்ட பைல் அல்லது இமேஜ் பைலை அப்லோட் செய்திடுங்கள். அதற்கு இந்த தளத்திலேயே வசதி உள்ளது. உடன் இந்த தளம் அந்த எழுத்து என்ன என்று கண்டுபிடித்துச் சொல்லும்.
இமேஜைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாக அது சரிதானா என்று உங்களிடம் கேட்கும். நீங்கள் சரியென்று தோன்றினால் உடனே அந்த எழுத்து பைல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தினால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் அதனை What The Font Forum என்ற அமைப் பிற்கு அனுப்பலாம். இதன் உறுப்பினர்கள் எவரேனும் எழுத்து என்ன வகை என்று கண்டறிந்து சொல்வார்கள். எழுத்துக்கள் குறித்து தீவிரமாக செயல்படுபவர்களுக்கு இந்த தளம் ஒரு உதவிடும் தளமாகும்.

0 comments:
Post a Comment