Latest

 

Sunday, 31 January 2010

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்!

2 comments
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.  ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் சான்ஃபிரான்சிஸ்கோவில் இதை அறிமுகப்படுத்தினார்.

பார்ப்பதற்கு சற்று பெரிய ஐபாட் மாதிரி தெரியும் இந்த கம்ப்யூட்டர், வெறும் 1.25 செ.மீ அடர்த்தி கொண்டது. 680 கிராம் எடையுடன், 24.3 செ.மீ கிளாஸ் டச் ஸ்கீரினுடன் காட்சியளிக்கிறது ஆப்பிள் ஐபேட்.

இ-புக், பிரவுசிங், வீடியோ காட்சிகளை துல்லியமான, தெளிவான தரத்துடன் பார்பதற்கு மிக ஏற்றவகையில் இந்த ஐபேட் உள்ளது.

இதன் விலை ரூ.23,250 முதல் ரூ. 38,600 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Comment

Wednesday, 27 January 2010

உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை அறிவதற்

0 comments


இணையம் மூலமாக பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும், பல்வேறுவிதமான தளங்களைப் பார்வையிடவும் ஒரு துருப்புச்சீட்டாக கடவுச்சொல் பயன்படுகிறது.

பெரும்பாலான மக்கள் அவர்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயர்களையே கடவுச்சொல்லாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இப்படி ஒருவரின் பெயரையே கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவது ஏற்புடையதன்று.ஒரு வலிமையான சொல்லை உருவாக்கவதே சிறந்த செயல்.

இணையத் திருடர்களிடம் இருந்து நமது தனிமனித உரிமையைப் பாதுகாக்கவேண்டும் எனில் மிகவும் கடினமான கடவுச்சொல்லையே பயன்படுத்த வேண்டும்.இப்படி உருவாக்கிய சொல்லின் வலிமையைச் சோதிப்பதற்காகவே ஒரு கருவியைக் கண்டேன்.

விதிமுறைகள் :

உங்கள் கடவுச்சொல்லில் குறைந்தபட்சம் ஒரு எண்ணும், ஒரு பெரிய எழுத்தும், ஒரு சிறிய எழுத்தும், ஒரு அடையாளக் குறிச்சொல்லும் கண்டிப்பாக இருக்கவேண்டும். குறைந்தபட்ச எழுத்துகளின் எண்ணிக்கை 8.

இதன் மூலம் 100% வலிமையான ஒரு சொல்லை உருவாக்கி அதையே பயன்படுத்துங்கள்.

இந்தக் கருவிக்கு The Password Meter என்று பெயர்.நான் உருவாக்கிய ஒரு password : I'mG0dBala#1I am God Bala Number 1 (நான் கடவுள் பாலா நம்பர் 1)

O எழுத்துக்குப் பதிலாக 0 (zero - பூஜ்யம் ) பயன்படுத்தி இப்படி ஒரு கடவுச்சொல்லை உருவாக்கினேன். இதற்கு 100% கிடைத்தது.தள முகவரி : http://www.passwordmeter.com/

Post Comment

Friday, 22 January 2010

கொம்பியூட்டர் ரோபோ

0 comments
இணையத்தில் உங்கள் கொம்ப்யூட்டர் பயன் பாட்டினை எளிதாக்க ரோபோ ஒன்று கிடைக்கிறது. இந்த ரோபோ என்ன செய்கிறது என்று பார்த்தால் பல ஆச்சர்யமான செயல்களை நொடியில் செய்து விடுகிறது.

கொம்ப்யூட்டரில் சர்ச் வசதி இருந்தும், சில வேளைகளில் நம்முடைய விருப்பப்படி வேகமாக தேடுதல் வேலையை மேற் கொண்டு நாம் விரும்பும் பைல்களையும், புரோ கிராம்களையும் எளிதில் பெற இயலவில்லை. இதற்கு
 காரணம், All Programs வதியை பயன்படுத்தி நாம் விரும்பும் புரோகிராமினை இயக்குவது கடினமாகிறது.


இந்த சிக்கல்களைத் தீர்க் கும் வகையில் நமக்கு உதவிட இலவசமாக ஒரு ரோபோ இணையத்தில் கிடைக்கிறது. இதனை Find and Robot எனப் பெயரிட்டு அழை க்கின்றனர்.

இந்த ரோபோ வினை இன்ஸ்டால் செய்துவிட்டால் சிறிய சர்ச் பாக்ஸ் ஒன்று தருகிறது. இதில் நாம் தேடும் பைலின் பெயர் அல்லது அவ்வகையில் ஏதேனும் ஒரு குறிப்பை தந்துவிட்டால் அது கொம்ப்யூட்டரில் தேடி நாம் இயக்க விரும்பும் பைலை எடுத்துத் தருகிறது.

உதாரணமாக, இந்த ரோபோ வினை இன்ஸ்டால் செய்து Windows Update என டைப் செய்தால், அதை முடிக்கும் முன்னரே இந்த அப்ளி கேஷன் புரோகிராம் எங்கிருக்கிறது என காட்டப்படுகிறது.

உடனே அதில் டபுள் கிளிக் செய் தால் விண்டோஸ் ஒஃப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திட முடிகிறது.

இந்த இல வச புரோகிராமினை பெற என உள்ள தளத்திற்கு செல்லவும்

Post Comment

Sunday, 17 January 2010

தடயங்களை அழிக்கலாம்!!

2 comments

கணிணியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் எங்கேயோ ஓரிடத்தில் பதிவு பண்ணப்படுகிறது என்றால் அது மிகையில்லை.நாம் சமீபத்தில் போன இணையதளமாகட்டும் அல்லது நாம் சமீபத்தில் கேட்ட பாடல், நாம் சமீபத்தில் பார்த்த வீடியோ, திறந்த கோப்புகள், படங்கள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் தடயங்களை விட்டுச் செல்கின்றன.கில்லாடி ஒருவர் (என்ன மாதிரி) கொஞ்சம் தேடினால் நமது கணிணி நம்மை பற்றிய அனைத்து விவரங்களையும் பிட்டு பிட்டு வைத்து விடும்.இதை தவிர்க்க அதாவது நாம் நமது கணிணியில் விடும் தடயங்களை அழிக்க இதோ இரு மென்பொருள்கள்.சமீபத்திய நமது அனைத்து செயல்களையும் நொடியில் அழித்து விடும். அவையாவன Temporary files Cache, URL history, cookies, Autocomplete form history, Hidden index.dat files. Recycle Bin, Recent Documents, Temporary files and Log files, Registry cleaner,Last download file location etc.

CCleaner

Product Page
http://www.ccleaner.com/

Direct Download Link
http://download.piriform.com/ccsetup136.exe

MRUblaster (Most Recently Used)

Product Page
http://www.javacoolsoftware.com/mrublaster.html

Direct Download Link
http://www.javacoolsoftware.net/downloads/mrublastersetup.exe

Post Comment

Monday, 11 January 2010

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள ஒரு மென்பொருள்

4 comments

Device Drivers, கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு ஹார்டுவேருக்கும் இது போன்று தனித்தனி CD என்று பெருகி விடும். அந்த Device Driver CD க்களை பாதுகாத்து வைத்து கொள்ளுதல் அவசியம்.

நமது கணினியில் இயங்குதளத்தை Reinstall செய்யும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைத்து இருப்போம். CD க்கள் பழுதாகி வேலை செய்யாமல் தொந்தரவு கொடுக்கும். இணையத்தில் சரியான Device Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. நமது ஹார்டுவேர் நிரந்தரமாக வேலை செய்யாமல் போகலாம்.

இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஹார்டுவேர் பொருட்களின் Device Driver களையும் நீங்கள் Backup எடுத்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை இயங்குதளத்தை Reinstall செய்யும் போது அந்த Backup ல் உள்ள அனைத்து Device Driver களையும் எளிதான முறையில் உபயோகித்து கொள்ள முடியும். Device Driver ருக்காக ஒவ்வொரு CD யாக தேடி அலைய வேண்டியதில்லை.

அந்த மென்பொருளின் பெயர் Double Driver . இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.
அதில் "Scan" பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியில் உள்ள ஹர்டுவேர்களுக்கான அனைத்து Device Driver களும் தோன்றும்.


Backup கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமித்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைத்துள்ளவற்றை தேவைப்படும் போது Restore செய்ய விரும்பினால் Backup ல் dd.exe என்ற ஃபைல் இருக்கும்.


அதனை ஓபன் செய்து Restore அழுத்தவும். அதில் தோன்றும் Device Driver களில் தேவையானவற்றை நிறுவி கொள்ளவும்

மறக்காமல் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் .....

Post Comment

Thursday, 7 January 2010

எக்ஸ் பி பாஸ்வேர்டை மீண்டும் அமைத்திட

1 comments

இன்டர்நெட்டில் உலா வருகையில் குறிப்பிட்ட தளம் ஒன்றுக்கான பாஸ் வேர்டினை மறந்துவிட்டீர்கள். இதனை அந்த தளத்திடம் தெரிவித்தால் உடனே அந்த தளம் நீங்கள் குறிப்பிட்ட கேள்விக்கு அளித்த பதிலைத் தந்து பின் அதற்கான விடை யையும் குறிப்பிட்டு அதிலிருந்து மறந்து போன பாஸ்வேர்டை நினைவிற்குக் கொண்டு வர உதவுகிறதுஆனால் எக்ஸ்பியில் கொடுத்த பாஸ்வேர்டை மறந்துவிட்டால் இது போன்ற கேள்வி பதில் எல்லாம் இருக்காது. அப்படியானால் மறந்துவிட்டால் அவ்வளவுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விண்டோஸ் எக்ஸ்பியில் கொடுத்த பாஸ்வேர்டை மீண்டும் ரீசெட் செய்திடும் வழிகள் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.


1. எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பாஸ்வேர்டை மறந்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டரை நிறுத்தி மீண்டும் Safe Mode ல் ரீ பூட் செய்திடுங்கள். இதற்கு ரீபூட் செய்தவுடன் எப்8 கீயை விட்டு விட்டு தட்டுங்கள். சிறிது நேரத்தில் ஒரு மெனு கிடைக்கும். அதில் SafeMode ல் கம்ப்யூட்டரை பூட் செய்திட ஓர் ஆப்ஷன் கிடைக்கும்.Safe Mode ஐத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டி கம்ப்யூட்டர் பூட் ஆவதைப் பாருங்கள்.


2. லாக் இன் ஸ்கிரீன் கிடைக்கும். இதில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்டில் நுழையவும்.


3. டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் SafeMode ல் இயங்குவது உறுதி செய்யப்படும். இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் ஜஸ்ட் ஙுஞுண் என்பதைத் தட்டவும். உங்கள் கம்ப்யூட்டர் திரையின் ரெசல்யூசன் சிறிது தெளிவற்ற தன்மையில் இருக்கும். கவலைப் பட வேண்டாம்.


4. அடுத்து File, Control Panel திறக்கவும். பின் அதில் User Accounts என்பதில் கிளிக் செய்து திறக்கவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து அக்கவுண்ட்களும் காட்டப்படும்.


5. இப்போது எந்த அக்கவுண்ட்டிற்கு பாஸ்வேர்ட் நீக்கப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Remove the Password என்று உள்ள லிங்க்கை நீக்கவும்.


6. இறுதியாக நீங்கள் புதிய பாஸ்வேர்ட் அமைக்கப்போவதாக இருந்தால் Create a Password என்ற லிங்க்கைத் தேர்ந் தெடுக்கவும். இங்கு பாஸ்வேர்ட் அமைப் பதாக இருந்தால் அமைத்துவிட்டு பின் அதனை பத்திரமாக நினைவில் வைத்துக் கொள்ளும் இடத்தில் எழுதி வைக்கவும்.

Post Comment

Monday, 4 January 2010

விண்டோஸ் ரீ ஸ்டார்ட் - ஷார்ட் கட்

0 comments

விண்டோஸ் இயக்க தொகுப்பினை பலமுறை ரீஸ்டார்ட் செய்திட எண்ணுகி றோம். சில வேளைகளில் இயங்கிக் கொண் டிருக்கும் வேர்ட் அல்லது பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் செய்து ஒவ்வொரு செயலாக முடிக்கலாம் என்று முயற்சி செய்தாலும் அது சண்டித் தனம் செய்தவாறு அப்படியே நிற்கும்.

அது போன்ற நேரத்தில் அல்லது வேறு ஏதாவது நேரத்தில் நாம் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திட முயற்சிப்போம். ஆனால் அதற்காக ஸ்டார்ட் பட்டனை அழுத்தி அதன் பின் கம்ப்யூட்டர் ஆப் செய்வதற்கான பிரிவில் கிளிக் செய்து கிடைக்கும் மூன்று கட்டங்கள் நிறைந்த விண்டோவில் ரீஸ்டார்ட் தேர்ந்தெடுத்து ஓகே செய்திட வேண்டுமே! ஏன் இத்தனை சுற்றுவழி. இதற்கு ஒரு ஷார்ட் கட் ஐகான் ஒன்று உருவாக்கினால் என்ன? செய்ய லாமா! கீழே படியுங்கள்.

விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மானிட்டரில் ரைட் கிளிக் செய்து New, Shortcut என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் “Type the location of the item” என்ற விஸார்ட் பாக்ஸில் %windir%\ System32\ shutdown.exer என டைப் செய்திடவும். அடுத்து Next கிளிக் செய்திடவும். அதன்பின் Finish என்பதையும் கிளிக் செய்திடவும்.

இப்போது ஒரு புதிய ஐகான் ஒன்றை உங்கள் டெஸ்க் டாப்பில் பார்க்கலாம். இந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Rename என்பதைத் தேர்ந்தெடுத்து அதற்கு “Restart” என்று பெயர் கொடுக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட ஒரு ஐகான் கிடைத்துவிட் டது. இதனைக் கிளிக் செய்து ஒரு முறை டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

Post Comment

Friday, 1 January 2010

கணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்

0 comments


1. வைரஸ் (Virus) வைரஸ்கள் பல வகைகளாக உபயோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இதன் பொதுவான குணமானது ஒரு கணினியில் உள்ள EXE எனப்படும் விரிவு கொண்ட புரோகிராம்களுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும் திறன் கொண்டது. இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாரா வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமது புரோகிராம்களில் உள்ள சில கரக்டர்களை வேறு சில கரக்டர்களாக மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வ?களை காணாமல் செய்தோ பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக்கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த I Love You எனப்படும் வைரஸ் கணினியில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

2. டிராஜன் ஹோர்ஸ் (Trojan Horse) இது ஒரு புது வகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கணினி புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும் பல நேரங்களில் எதிர்பார்க் காத சில வேலைகளைச் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு யூசர் தனது புரோகிராமை எடுத்து அதில் சிலமாற்றங்களைச் செய்ய முற்படும்போது அந்தப் புரோகிராமை அழித்து விடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன் ஹோர்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் யூசர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போகும் நிலை உருவாகிறது.

3. வோம் (Worm) இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் கொப்பி செய்யும்போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே அளவாகவே காட்டும். ஆகையால் நாம் ஏதாவது ஒன்றை அழிக்க நினைத்து புரோகிராமை அழித்து விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோ கிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக ஓர் அலுவலகத்தில் கணினியைஉபயோகிக்கும் ஒருவர் ஒவ்வொரு முறையும் தனது கணினியில் இருந்து Server கணினிக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும்.

அது போன்று சோதனையிடும் போது இது போன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றைக் கணினியில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Post Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com