Latest

 

Sunday 21 November 2010

விண் XP கீ எளிதாக பெறுங்கள்!!!!!!!


altவிண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்குபவர்கள், இதற்கான மைக்ரோசாப்ட் சிடியினை வைத்துப் பதிந்து இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவர்கள் தங்கள் நிறுவன சிடி, நகல் எடுத்த சிடி என எதனையாவது தந்திருக்கலாம்.


நிறுவன சிடிக்களில் அதன் டப்பாக்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அச்சிடப்பட்டு தரப்பட்டிருக்கும். காலப் போக்கில் இந்த டப்பா காணாமல் போகும்; அல்லது வைத்த இடம் மறந்து போகும். என்றாவது சிஸ்டம் கிராஷ் ஆகி, ஹார்ட் டிஸ்க் ரீ பார்மட் செய்து, சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடுகையில் தான் ப்ராடக்ட் கீ இல்லையே என்ற நிலை வரும். அல்லது சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும்.






இந்த தொல்லையிலிருந்து எப்படி மீள்வது? ஒரிஜினல் சிடியோ அல்லது ஒரிஜினல் போல காப்பி எடுத்த, நிறுவனங்கள் வழங்கிய சிடியோ இருக்கும் வரை, இந்த ப்ராடக்ட் கீயை அறிந்து கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.alt








1. சிஸ்டம் சிடியை அதன் டிரைவில் செலுத்தவும்.




2. விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் சிடியின் டைரக்டரிகளுக்குள் நுழையவும். அதில் கிடைக்கும் போல்டர்களில் i386 folder என்ற போல்டரைத் திறக்கவும்.




3. அங்கு unattend.txt என்ற பைலைத் திறந்து அதன் இறுதி வரை செல்லவும்.



4. இறுதியில் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான விண்டோஸ் எக்ஸ்பி
ப்ராடக்ட் கீ இருக்கும்.

Re- TAMILCOMPUTER

Post Comment

0 comments:

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com