கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் உருவாக்கிய பைல் ஒன்றை டெலீட் செய்துவிட்டீர்கள். அது அழிந்து போய்விட்டதா? நீக்கப்பட்டுவிட்டதா? யாரும் பார்க்க முடியாதபடி காணாமல் போய்விட்டதா? இல்லை, இல்லவே இல்லை.
அந்த பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் சென்று தங்கலாம். நீங்கள் புத்திசாலியாய் இருந்தால், அதிலிருந்தும் அழித்துவிட்டிருக்கலாம். ஆனால் அப்போதும் அது கம்ப்யூட்டரிலிருந்து அழிவதில்லை. உங்கள் கம்ப்யூட்டர் அதனை அழிப்பதில்லை. அதற்குப் பதிலாக, அந்த பைல் இருந்த இடத்தை, அடுத்த பைல் வந்து தங்கலாம் என்று அறிவிக்கிறது. எனவே திறமையாக எழுதப்பட்ட ஒரு புரோகிராம் அந்த பைல் இருக்கும் இடத்தை, விதத்தை அறிந்து. பின் மீண்டும் மீட்டு உங்களுக்குத் தரலாம். அல்லது அடுத்தவர்கள் அதனைக் கண்டறியலாம். குறிப்பாக இந்த பைல்களில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களான, பேங்க் அக்கவுண்ட் எண், பாஸ்வேர்ட் ஆகியவை இருந்தால் அவை எந்த நிலையிலும் மற்றவர்களுக்குச் சென்றுவிடக்கூடாது.
எப்படி ரகசியசெய்தி எழுதிய தாள் ஒன்றை நாம் கிழித்துப் போட்டாலும், பொறுமையான நபர் ஒருவர் அந்த துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, ஒட்டி தகவலைத் தெரிந்து கொள்ளலாமோ, அதே போல கம்ப்யூட்டரில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட ஒரு பைலை யார் வேண்டுமானாலும், சரியான புரோகிராம்கள் வழியாக எடுத்துக் கொள்ளலாம்.
தாள்களை, ஜஸ்ட் கிழிக்காமல் கடுகளவு துண்டுகளாக வெட்டி எறியும் ஷ்ரெடர் போல, நான் அழிக்கும் கம்ப்யூட்டர் பைல்கள் ஆக வேண்டும் என விரும்புகிறீர்களா! கவலையே வேண்டாம். அதற்கெனவே ஒரு சிறந்த புரோகிராம் உள்ளது. அதன் பெயர் Sure Delete. இதன் பதிப்பு 5.1.1., அண்மையில் வெளியானது. இந்த புரோகிராம் பைல்களில் உள்ள டேட்டாவினை நுணுக்கமாக அழிக்கிறது. பைல்களை மட்டுமின்றி ஒரு போல்டர் முழுவதையும் இதே போல் அழிக்க வேண்டும் என விரும்பினாலும் அழிக்கலாம். இந்த புரோகிராம் அழிக்கப்படும் ஒரு பைலின் மீது மாறான தகவல்களை குயிக் வைப் (Quick Wipe) என்ற திட்டத்தில் நான்கு முறை, டிபன்ஸ் துறை என்ற வகையில் ஏழு முறை மற்றும் சூப்பர் செக்யூர் வகையில் 24 முறை என மூன்று வகைகளில் எழுதுகிறது.
இதனால் எந்த ரெகவரி பைல் மூலம் முயற்சி செய்தாலும், பைல்களை மீண்டும் எடுக்க முடியாது. ஷ்யூர் டெலீட் FAT12, FAT16, FAT32, and NTFS மற்றும் ஆகிய பைல் பார்மட்டுகளில் முழுமையான முறையில் செயல்படுவது உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரை இதனைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பைல் விரைவில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கும். இதனை இன்ஸ்டால் செய்து இயக்குவதும் எளிதானதாகும். தேவை இல்லை என்றால் கம்ப்யூட்டரிலிருந்து இதனை எடுத்துவிடலாம்.
Download
Wednesday, 30 December 2009
Sure Delete ஷ்யூர் டெலீட்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment