Latest

 

Friday 4 December 2009

உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தை பற்றிய தகவல்களை பெற ஒரு மென்பொருள்




உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இயங்கும் அனைத்து சாதனங்களின் திறன் குறித்து அறிய உங்களுக்கு ஆவலாக உள்ளதா! அதற்கான புரோகிராம் டவுண்லோட் தான் SIW என்பதாகும். இது System Information for Windows என்பதைக் குறிக்கிறது.



சிஸ்டம் சாப்ட்வேர், நெட்வொர்க் மற்றும் பிற ஹார்ட் வேர் சாதனங்களின் திறன் குறித்து தெளிவாக எடுத்துரைக்கிறது. சிபியு கிளாக் செயல் வேகம், ராம் மெமரியின் அலைவேகம், பயாஸ், மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, பேட்ச் பைல் இணைப்பு,லைசன்ஸ் குறித்த தகவல் என அனைத்து தகவல்களும் தரப்படுகின்றன. இவற்றுடன் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் குறித்த தகவல்களும் கிடைக்கின்றன.



இந்த புரோகிராமில் சென்சார் ஒன்று தரப்படுகிறது. இது ஒவ்வொரு சாதனப் பகுதியின் வெப்ப தன்மை குறித்து அறிவிக்கிறது. பாஸ்வேர்ட் மறந்து போனால் எடுத்துத் தரும் வசதியும் இதில் உண்டு. இது செயல்பட குறைந்த அளவில் மெமரியை எடுத்துக் கொள்கிறது. சில நொடிகளில் அனைத்து தகவல்களையும் பெற்றுத் தருகிறது.




இந்த அடிப்படை புரோகிராமினை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். சில சிறப்பு வசதிகளுடன் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளும் உண்டு. விண்டோஸ் சிஸ்டத்தில் பதிந்து இயக்கப் படக் கூடிய புரோகிராம் ஒன்றும், தனியாகவே இயக்கக் கூடிய புரோகிராம் ஒன்றும் கிடைக்கிறது. எனவே அதனை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து இயக்கலாம்.



தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்








Post Comment

0 comments:

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com