நெட் மீட்டிங் என்பது விண்டோஸுடன் வரும் ஒரு உரையாடல் மென்பொருள். இதன் மூலம் ஒரு கணினி வலையமைப்பிலோ அல்லது இணையம் வ்ழியிலோ ஒருவரோடொருவர் பல வகைப்பட்ட தொடர்பாடலை மேற்கொள்ள முடியும். யாகூ, எம்.எஸ்.என் போன்ற Internet Messenger களின் வருகைக்கு முன்னர் நெட் மீட்டிங்கே பிரபலமான ஒரு இணைய உரையாடல் மென்பொருளாய் இருந்தது விண்டோஸின் பதிப்புகளான விண்டோஸ் 95/98/2000 மற்றும் எக்ஸ்பீ பதிப்புகளில் இது இணைக்கப் பட்டுள்ளது. எனினும் அண்மைய பதிப்பான விஸ்டாவில் நெட் மீட்டிங் இணைக்கப் படவில்லை. பதிலாக வேறு எப்லிகேசன்களைப் பரிந்துரை செய்கிறது மைக்ரோஸொப்ட்...
நெட்மீட்டிங்கில் என்ன வசதிகள் கிடைக்கின்றன?
பைல்களயும் மென்பொருள்களையும் பறி மாறிக் கொள்ளலாம்.
டெக்ஸ்ட் செட்டிங் எனப்படும் எழுத்து வடிவ உரையாடல், குரல் வழி மற்றும் வீடியோ உரையாடலில் ஈடு பட முடியும்
ஒரு கணினியின் டெஸ்க்டொப்பைப் பகிர்ந்து கொள்ள் முடியும். இதன் மூலம் ஒரு கணினியில் நடப்பதை ஏனையோர் தமது கணினியில் பார்வையிட முடியும். மல்டி மீடியா ப்ரோஜெகடர் தேவையை இந்த வசதி மூலம் ஓரளவு நிவர்த்தி செய்யலாம்.
White Board எனப்படும் எம்.எஸ். பெயின்ட் போன்ற ஒரு எப்லிகேசனில் நெட்வர்க்கில் இணைந்துள்ள பல பேர் சேர்ந்து ஒரே படத்தை ஒரே நேரத்தில் வரைய முடியும். தகவல்களைப் பரிமாற முடியும்.
நெட் மீட்டிங் தரும் வசதிகளைப் பயன் படுத்த் கணினி இணையத்திலோ அல்லது ஒரு உள்ளக வலையமைப்பிலோ இணைந்திருத்த்ல் அவசியம். இரண்டு கணினிகளை இணைப்பதன் மூலமும் இந்த வசதிகளைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.
நெட் மீட்டிங்கை முதலில் எவ்வாறு ஆரம்பிப்பது?
Start " Programs " Accessories " Communications ஊடாக NetMeeting. தெரிவு செய்யுங்கள் அல்லது Start " Run தெரிவு செய்து Conf எனும் கட்டளையை டைப் செய்யுங்க்ள். அப்போது ஒரு விசர்ட் தோன்றும். அந்த Next க்ளிக் செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்களைப் பற்றிய தகவல்களை வழங்கிய பிறகு மீன்டும் Next க்ளிக் செய்யுங்கள். அடுத்து தோன்றும் கட்டத்தில் Directory Server என்பது அவசியமில்லை எனின் தெரிவுகளை மேற்கொள்ளாமலே அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.
அங்கு பொருத்தமான இணைப்பு வகையைத் தெரிவு செய்யவும். ஒரு உள்ளக வலையமைப்பு எனின் Local Area Network என்பதைத் தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லவும். அங்கு விரும்பினால் Put a shortcut on my Desktop என்பதைத் தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.
அடுத்து Audio Tuning Wizard தோன்றும். இங்கு மைக்ரபோனை இணைத்து அதனைப் பரீசித்துக் கொள்ள வேண்டும். Audio / Video வசதிகள் தேவையில்லை எனின் அடுத்த கட்டங்களைப் புறக்கணித்து விட்டு இறுதியாக Finish பட்டனில் க்ளிக் செய்யலாம். Audio / Video வசதிகளை நெட்மீட்டிங் கன்பிகர் செய்த பின்னரும் கூட சேர்த்துக் கொள்ளலாம். .
நெட் மீட்டிங்கில் அடுத்தவருடன் இணைப்பை ஏற்படுத்துவது எப்படி?
முதலில் நெட் மீட்டிங் திறந்து கொள்ளுங்கள். பிறகு நெட் மீட்டிங் விண்டோவில் இணைப்பை ஏற்படுத்த விரும்பும் கணினியின் IP முகவரியை அல்லது கம்பியூட்டர் பெயரை டைப் செய்து Enter விசையை அழுத்த இணைப்பை ஏற்படுத்த விரும்பும் கணினியின் டாஸ்க் பாரில் ஒரு அறிவித்தல் தோன்றி அந்தக் கணினியில் பணியாற்றுபவரின் சம்மதத்தைக் கேட்டுகும். அவர் Accept க்ளிக் செய்ய இரண்டு கணினிக்ளும் நெட் மீட்டிங்கில் இணைந்து கொள்கின்றன. இவ்வாறு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி அதன் வசதிகளை பயன்படுத்தலாம்.
ஐபி முகவரியை எவ்வாறு அறிந்து கொள்வது?
விண்டோஸ் இயங்கு தளத்தில் ஸ்டாட் மெனுவில் Run தெரிவு செய்ய வரும் ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து ஓகே செய்யுங்கள். அப்போது தோன்றும் விண்டோவில் ipconfig என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த உங்கள் கணினியின் ஐபி முகவரியைக் காணலாம். ஒரு வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருந்தால் மட்டுமே ஐபி முகவரியைக் காணலாம் எனபதையும் நினைவில் கொள்ளுங்கள்.
Computer Name தெரிந்துகொள்வது எப்படி?
My computer ஐகன் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் ; context menu விலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் System properties டயலொக் பொக்ஸில்; Computer Name எனும் டேபில் க்ளிக் செய்ய Full computer name பகுதியில் உங்கள் கணினியின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
Friday, 20 November 2009
வலையமைப்பில் உரையாட விண்டோஸ் தரும் Net Meeting
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment