நமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும். சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்றுவிடுவர். அவர்கள் டீ சாப்பி்ட்டுவருவதற்கும் கணிணி ஆன் ஆகி இருப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். கணிணி அவ்வாறு மெதுவாக இயங்க என்ன காரணம்.?
சில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது அந்த மென்பொருள்களின் ஐகான்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள டாஸ்க்பாரின் வலது பக்க மூலையில் அமர்ந்துவிடும். இவ்வாறு தேவையில்லாத மென்பொருள்கள் நமது கம் யூட்டர் பூட் ஆகும் போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு லோடு ஆவதால் கணிணி பூட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என இப்போது காணலாம்.
முதலில் டெஸ்க்டாப்பிலுள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து ரன் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் msconfig என தட்டச்சு செய்து ஓ.கே. கொடுங்கள். விளக்கப்படம் கீழே:-
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது வரும் Startup விண்டோவில் உங்களுக்குஎந்த மென்பொருள் விண்டோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோடு ஆக வேண்டுமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை Disenable
செய்து விடுங்கள். Apply செய்து ஓ.கே. கொடுங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ரீ -ஸ்டார்ட் கொடுங்கள். இப்போது உங்கள் கணிணி வேகமாக செயல்படுவதை காண்பீர்கள்.
5 comments:
www.tamilaruvy.com wach new dvd hq movies 1 on net visit now www.tamilaruvy.com or www.aruvymovies.com
oh! very good! i will try! Thanks
thanks 4 come to my web site.....
how to do with window's vista?
u follow that way. it is same to vista..
try again.
Post a Comment