Monday, April 14, 2025

Latest

 

Wednesday, 18 November 2009

திரை அசைவுகளைப் படம் பிடிக்கும் CamStudio



கணினித் திரையில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பதிவு செய்து அதனை ஒரு வீடியோ பைலாக உருவாக்கிக் தரக் கூடிய ஒரு மென்பொருளே கேம்ஸ்டுடியோ. இது ஒரு இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள். திரை நடவடிக்கைகளை மாத்திரமன்றி கூடவே அதனுடன் ஒலியையும் பதிவு செய்து தருகிறது கேம்ஸ்டுடியோ.



கேம்ஸ்டுடியோவில் என்னென்ன வசதிகள் உள்ளன?


AVI வீடியோ பைலை ப்ளேஸ் ப்ளேயரில் இயங்கத்தக்க SWF பைலாக மாற்றிக் கொள்ளலாம்.

உருவாக்கும் வீடியோ படங்களுக்கு ஒலிவாங்கி அல்லது ஒலிபெருக்கி மூலம் ஒலியை இணைக்கலாம்.

வீடியோ படங்களுக்குத் தலைப்பிடலாம். குறிப்புகளை வழங்கலாம்.

உருவாக்கும் வீடியோ பைலை திகதி மற்றும் நேரத்தை பைல் பெயராகக் கொண்டு தானாக்வே சேமித்துக் கொள்ளலாம்.

வீடியோ பைலின் தரத்தைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யலாம். வீசீடி அல்லது டீவிடியால் பதிவு செய்வதற்கான உயர் தரத்திலான வீடியோவையும் இமெயிலில் அனுப்பக் கூடிய வாறான சிறிய பைல் அளவு கொணடதாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

திரை முழுவதையும் அல்லது திரையில் விரும்பிய ஒரு பகுதியை மாத்திரம் பதிவு செய்து கொள்ளலாம்.

கேம் ஸ்டுடியோ 2.5 எனும் பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1.3 மெகாபைட் அளவு கொண்ட ஒரு சின்னஞ் சிறிய மென்பொருளான கேம்ஸ்டுடியோவை விண்டோஸின் எந்தப் பதிப்புடனும் நிறுவிக் கொள்ள முடியும்.



கேம்ஸ்டுடியோவை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?


எந்தவொரு பயன்பாட்டு மென்பொருளுக்கான டிமோ வீடியா காட்சிகள் மற்றும் வீடியோ டியுடோரியல் உருவாக்க முடியும்.

பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம்.

கணினியில் தோன்றும் பிரச்சினகளை வீடியோவாகப் பதிவு செய்து தொழில் நுட்ப வல்லுணர்களிடம் காண்பித்து அதற்கான தீர்வைப் பெறலாம்.

கணினியில் அவ்வப்போது தெரிந்து கொள்ளும் புதிய விடயங்களை வீடியோவாகப் பதிவு செய்து வைக்கலாம்.

மிகவும் எளிமையான இடை முகப்பைக் கொண்ட கேம்ஸ்டுடியோவை இயக்கும் விதத்தை ஓரிரு நிமிடத்திலேயே கற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. எங்காவது மாட்டிக் கொள்ளும் பட்சத்தில். உதவ உதவிக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன்.

கேம்ஸ்டுடியோ மென்பொருளை எனும் www.camstudio.org எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Post Comment

0 comments:

Post a Comment

Pages (94)1234 Next

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com