Latest

 

Sunday, 31 January 2010

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்!

2 comments
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.  ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் சான்ஃபிரான்சிஸ்கோவில் இதை அறிமுகப்படுத்தினார்.

பார்ப்பதற்கு சற்று பெரிய ஐபாட் மாதிரி தெரியும் இந்த கம்ப்யூட்டர், வெறும் 1.25 செ.மீ அடர்த்தி கொண்டது. 680 கிராம் எடையுடன், 24.3 செ.மீ கிளாஸ் டச் ஸ்கீரினுடன் காட்சியளிக்கிறது ஆப்பிள் ஐபேட்.

இ-புக், பிரவுசிங், வீடியோ காட்சிகளை துல்லியமான, தெளிவான தரத்துடன் பார்பதற்கு மிக ஏற்றவகையில் இந்த ஐபேட் உள்ளது.

இதன் விலை ரூ.23,250 முதல் ரூ. 38,600 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Comment

Wednesday, 27 January 2010

உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை அறிவதற்

0 comments






இணையம் மூலமாக பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும், பல்வேறுவிதமான தளங்களைப் பார்வையிடவும் ஒரு துருப்புச்சீட்டாக கடவுச்சொல் பயன்படுகிறது.

பெரும்பாலான மக்கள் அவர்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயர்களையே கடவுச்சொல்லாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இப்படி ஒருவரின் பெயரையே கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவது ஏற்புடையதன்று.ஒரு வலிமையான சொல்லை உருவாக்கவதே சிறந்த செயல்.

இணையத் திருடர்களிடம் இருந்து நமது தனிமனித உரிமையைப் பாதுகாக்கவேண்டும் எனில் மிகவும் கடினமான கடவுச்சொல்லையே பயன்படுத்த வேண்டும்.இப்படி உருவாக்கிய சொல்லின் வலிமையைச் சோதிப்பதற்காகவே ஒரு கருவியைக் கண்டேன்.

விதிமுறைகள் :

உங்கள் கடவுச்சொல்லில் குறைந்தபட்சம் ஒரு எண்ணும், ஒரு பெரிய எழுத்தும், ஒரு சிறிய எழுத்தும், ஒரு அடையாளக் குறிச்சொல்லும் கண்டிப்பாக இருக்கவேண்டும். குறைந்தபட்ச எழுத்துகளின் எண்ணிக்கை 8.

இதன் மூலம் 100% வலிமையான ஒரு சொல்லை உருவாக்கி அதையே பயன்படுத்துங்கள்.

இந்தக் கருவிக்கு The Password Meter என்று பெயர்.



நான் உருவாக்கிய ஒரு password : I'mG0dBala#1



I am God Bala Number 1 (நான் கடவுள் பாலா நம்பர் 1)

O எழுத்துக்குப் பதிலாக 0 (zero - பூஜ்யம் ) பயன்படுத்தி இப்படி ஒரு கடவுச்சொல்லை உருவாக்கினேன். இதற்கு 100% கிடைத்தது.



தள முகவரி : http://www.passwordmeter.com/

Post Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com