Latest

 

Sunday 28 March 2010

விண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....

0 comments

windows

XP திரையை நமக்கு பிடித்த மாதிரி  மாற்றுவதற்கு bootskin என்ற மென்பொருளை பயன் படுத்தி மாற்றலாம்.

இந்த மென்பொருளை நிறுவி அதிலுள்ள திரைகளில் நமக்கு பிடித்தபடி மாற்றலாம். அல்லது random முறையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு திரை தோன்றும்படி செய்யலாம். இதிலுள்ள திரைகள் நமக்கு பிடிக்காவிட்டால் இணையத்திலிருந்து நமக்கு பிடித்ததை தரவிறக்கம் பண்ணிக்கொள்ளலாம்.

boot

இது முற்றிலும ஒரு இலவசமான மென்பொருள்.

Download:
http://bootskin.en.softonic.com/

Post Comment

Sunday 21 March 2010

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

2 comments

பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.

ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.

ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.

தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.

நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.

ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.

Post Comment

Saturday 13 March 2010

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

5 comments

அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம். கையெழுத்தை பொண்டாக மாற்றித் தருகிறது Fontcapture.com எனும் இணைய தளம். இது ஒரு ஓன்லைன் சேவையாகும்.

கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர் எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான் கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம்.

சரி, இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.

கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில் http://www.fontcapture.com/ எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் பொண்ட் டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள் கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ் பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு பொன்ட் பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

என்னுடைய கையெழுத்து (தலையெழுத்து மாதிரியே) மோசமாக அமைந்து விட்டதால் நான் இதனைப் பரீட்சித்துப் பார்க்க வில்லை. நீங்கள் ஒரு முறை முயன்று பாருங்கள்

Post Comment

Saturday 6 March 2010

கன்வர்ட் -Convert

0 comments

கன்வர்ட் (Convert) என்பது அலகு மாற்றம் செய்யும் ஒரு சிறிய கருவி. இதன் முலம் பல வகையான அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிக் கொள்ளலாம். அதாவது தூரம், வெப்பம், கனவளவு, நேரம்,வேகம், திணிவு, வலு, அடர்த்தி, அமுக்கம், சக்தி போன்ற பல வகையான .அலகுகளை இலகுவாக மாற்றிக் கொள்ளும் வசதியை இது தருகிறது.



மாணவர்கள், ஆசிரியர்கள் மாத்திரமன்றி அனைவருக்கும் பயன் படக் கூடிய பல வகையான அலகு மாற்றிகளை இது கொண்டுள்ளது.



கன்வர்ட் எனும் இந்த இலவச மென்பொருள் கருவியை www.joshmadison.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Zip பைலாகக் கிடைக்கும் இது 152 கிலோ பைட் பைல் அளவைக் கொண்டுள்ளது.

Post Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com