Latest

 

Saturday 24 July 2010

என்ன புரோகிராம் என்ற அறிவிப்பு

0 comments

கம்ப்யூட்டரில் டூல்பார் அல்லது டெஸ்க்டாப்பில் ஐகான் மீது உங்களுடைய மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால் உடனே புரோகிராம் பெயர் சிறிய மஞ்சள் கட்டத்தில் கிடைக்கும். சில புரோகிராம்களுக்கு நாம் மேலும் சில குறிப்புகளை எழுதி வைத்து நமக்கு நினைவூட்டும் படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக என்னிடம் பிராட்பேண்ட் இணைப்பு இருந்தாலும் அது காலை வாரிவிடும் பட்சத்தில் டெலிபோன் வழியே இணைப்பிற்கான வழியையும் ஏற்படுத்தி ஐகானை உருவாக்கி வைத்திருக்கிறேன். அதனைப் பயன்படுத்தும் முன் சிபியுவின் பின்புறம் இருந்து வரும் டெலிபோன் இணைப்பிற்கான கேபிளை டெலிபோனுடன் இணைக்க வேண்டும்.



இதனை அடிக்கடி மறந்து போவோம். எனவே இந்த புரோகிராம் ஐகான் மீது கிளிக் செய்திட கர்சரைக் கொண்டு சென்றவுடன் Fix the Telephone line first என்ற செய்தி வரும்படி அமைத்துக் கொண்டேன். இதே போல பல புரோகிராம்களுக்கு எச்சரிக்கை செய்தியினைப் போட்டு வைக்கலாம். இதனை ஏற்றுக் கொள்ளும் புரோகிராம்களை இயக் குகையில் நமக்கு ஒரு நினைவூட்டல் கிடைக்கும் அல்லவா! இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்ப்போம்.


எந்த புரோகிராமிற்கு இந்த செய்தி இணைப்பு வேலை நடைபெற வேண்டுமோ அந்த புரோகிராமின் ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்லவும். பின் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் கீழாக Comment என்ற பிரிவில் உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய செய்தியை டைப் செய்து வைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அந்த ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்லும் போதெல்லாம் அந்த செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.

Post Comment

Saturday 17 July 2010

AVI கோப்புகளை MP4 கோப்புகளாக மாற்ற .

5 comments
கணினியில் நாம் அடிக்கடி பார்க்கும் வீடியோ கோப்புகளின் வடிவமானது AVI என அமைந்திருக்கும்.

இந்த வடிவானது, iPhone, iPod, Zune, PSP, PS3 போன்ற கருவிகளுடன் ஒத்திசைவு (compatibility) இல்லாதது.

MP4 வடிவங்களையே மேற்கண்ட கருவிகள் ஏற்றுக்கொள்கின்றன.AVI கோப்புகளை MP4 ஆக மாற்றுவதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Convert AVI to MP4. இதன் மூலம் WMA, MOV, MPEG1 / MPEG2, DivX ஆகிய பல்வேறு விதமான கோப்பு வடிவங்களை MP4 ஆக மாற்ற முடியும்.

மிகஎளிமையான முகப்பைக் கொண்ட மென்பொருள் இது. இது Windows XP மற்றும் Windows Vista இந்த இயங்குதளங்களில் இயங்கும்.

தரவிறக்கச் சுட்டி
click here to download

Post Comment

Saturday 10 July 2010

ஜி-மெயிலில் ஆர்க்கிவ் (archive) பட்டன் ஏன்? எதற்காக?

4 comments
ஜிமெயிலின் ஒரு பெரிய வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக்கும் (கொடவுண்) இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெயிலைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் பலருக்கு இது புதிராகவே இருக்கும். இந்த ஆர்க்கிவ் என்பது உங்கள் மெயில்களைப் பல ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருக்கும் என்பதல்ல. அவற்றை அது விடவே விடாது; என்றும் விட்டு விடாது என்று எண்ண வேண்டாம்.

இந்த ஆர்க்கிவ் பட்டனை உங்கள் ஜிமெயிலின் இன்பாக்ஸ் தோற்றத்தில் காணலாம். இதில் கிளிக் செய்தால் அது அப்போது கர்சர் உள்ள இமெயில் செய்தியை இன்பாக்ஸிலிருந்து எடுத்துவிடுகிறது. அப்புறம் என்ன செய்கிறது? ஏன் எடுக்கிறது? இது உங்கள் இமெயில்களை ஒரு ஒழுங்கு செய்திடும் வேலை தான். நீங்கள் ஆச்சரியப்படலாம். இன்பாக்ஸிலிருந்து எடுக்கப்பட்ட இமெயில் எங்கு செல்கிறது என்று பார்க்க விரும்பலாம். இது நீங்கள் அந்த இமெயில் செய்திக்கு ஏதேனும் லேபிள் பெயர் தந்திருக்கிறீர்களா என்பதைப் பொறுத்து உள்ளது. நீங்கள் அதற்கு லேபிள் கொடுத்திருந்தால் அது அந்த லேபிளுக்கான பாக்ஸிற்குச் செல்கிறது.இதனை ஆல் மெயில் பிரிவிலும் (All Mail) பார்க்கலாம்.

இதனைக் கொஞ்சம் இன்னும் பின்னோக்கிச் சென்று விளக்கமாகப் பார்க்கலாம். உங்கள் ஜிமெயிலுக்கு ஒரு இமெயில் செய்தி வந்தவுடன் அது தானாகவே இன்பாக்ஸ் லேபிலை வாங்கி கொண்டு இன்பாக்ஸ் பிரிவில் வைக்கப்படுகிறது. இதனுடைய லேபிளை மாற்றாதவரை அது வேறு எந்த பிரிவிற்கும் மாற்றப்படுவதில்லை. இதற்கு ஒரு லேபிள் தராமல் ஆர்க்கிவ் பட்டன் அழுத்தி ஆர்க்கிவ் பிரிவிற்கு அனுப்பினால் ஆல் மெயில் வியூவில் மெசேஜிற்கு அடுத்தபடியாக "Inbox என்று இருப்பதைக் காணலாம். இது எதற்காக என்றால் உங்களின் அனைத்து மெயில்களையும் நீங்கள் அவை எங்கிருந்து வந்தவை என்று பார்ப்பதற்காக. அதே நேரத்தில் அவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படுகின்றன.

இதனை இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்ளவும் இந்த ஏற்பாட்டினைச் சோதித்துப் பார்க்கவும் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன் பாக்ஸ் சென்று ஏதேனும் ஒரு இமெயில் மெசேஜைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஒரு லேபில் கொடுக்கவும். ஆனால் ஆர்க்கிவ் செய்திட வேண்டாம். இனி நீங்கள் கொடுத்த லேபில் வியூ சென்று அங்கு உள்ள பட்டியலில் இந்த இமெயில் செய்தி இடம் பெற்றிருப்பதனைக் காணுங்கள். இங்கு நீங்கள் கொடுத்த லேபிலும் முதலிலேயே அதற்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபிலும் காட்டப்படுவதனைக் காணலாம். இவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படும்.


இப்போது மீண்டும் இன் பாக்ஸ் சென்று இன்னொரு மெசேஜைத் தேர்ந்தெடுங்கள். இப்போது அதற்கு ஒரு லேபில் அமைத்து ஆர்க்கிவ் பட்டனையும் அழுத்தி ஆர்க்கிவ் செய்திடுங்கள். அடுத்து லேபில் வியூவில் சென்று பார்த்தால் நீங்கள் அதற்குக் கொடுத்த லேபில் இருக்கும். ஆனால் இன்பாக்ஸ் லேபில் இருக்காது. ஒரு மெசேஜை ஆர்க்கிவ் செய்திடுகையில் அந்த இமெயில் செய்திக்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபில் நீக்கப்படுகிறது.இதனால் இந்த இமெயில் மெசேஜ் இன்பாக்ஸில் தொடர்ந்து காட்டப்படமாட்டாது. நீங்கள் தான் அதனை கொடவுணில் போட்டு விட்டீர்களே.

அப்படியானால் ஆர்க்கிவ் செய்ததை மீண்டும் மீட்டு இன்பாக்ஸ் கொண்டு வர முடியாதா? கொண்டு வந்து அதற்கு வேறு ஒரு லேபில் வழங்க முடியாதா? என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. தாராளமாகக் கொண்டு வரலாம். ஆர்க்கிவ் சென்று மீட்க விரும்பும் மெசேஜில் கர்சரைக் கொண்டு செல்லவும். அங்கு More Actions என்று ஒரு லிங்க் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் உள்ள Move to Inbox என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் அந்த மெசேஜிற்குச் செய்ததெல்லாம் மீண்டும் ரிவர்ஸ் ஆகி அந்த மெசேஜ் இன்பாக்ஸிற்குச் சென்றுவிடும்.

ஆர்க்கிவ் பட்டன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட சில இமெயில்களை எடுத்துச் சென்று தனியே பிரித்தெடுத்து வைக்க முடிகிறது. முயற்சி செய்து பார்த்தால் இதனை நீங்கள் விரும்புவீர்கள்.

Post Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com