Latest

 

Sunday, 19 February 2012

Photoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள் free!!!!

2 comments
போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து பயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.   இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:
•இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
•TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது.
•முற்றிலும் இலவசமான மென்பொருள்.
•மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
•போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
•Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது.
 
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய  http://sourceforge.net/projects/gimp-win/

இந்த மென்பொருளின் பயனர் கையேடு(Users Manual) டவுன்லோட் செய்ய -http://sourceforge.net/projects/gimp-win/files/GIMP%20Help%202/GIMP%20Help%202.6.0%20%28updated%20installer%29/gimp-help-2-2.6.0-en-setup.exe/download

Post Comment

Sunday, 1 January 2012

உங்களை நீங்களே அறிந்து கொள்ள..Who am I????

1 comments
      பாரெல்லாம் பரந்து வாழும் உறவுகள் அனைவருக்கும் எமது புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்




நீ ங்கள் பயன்படுத் தும் கம்ப்யூட்டர் உங்களுடையதுதான். கஷ்டப்பட்டு காசு சேர்த்து அல்லது பாதி கடன் வாங்கி உங்கள் மகன் /மகள் படிக்கவும் நீங்கள் அலுவலக வேலைகளை மேற்கொள்ளவும் வாங்கியது உண்மைதான். அந்த கம்ப்யூட்டரில் என்ன என்ன உள்ளது?

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன? எந்த அல்லது எத்தனாவது சர்வீஸ் பேக் பதியப்பட்டுள்ளது? கம்ப்யூட்டர் உரிமையாளர் என யாருடைய பெயர் உள்ளது? சிஸ்டம் மாடல் பெயர் என்ன? மொத்த மெமரி எவ்வளவு? அதில் பிசிகல் மெமரி எவ்வளவு? விர்ச்சுவல் மெமரி எவ்வளவு/ என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆவல் இல்லையா? இதை எல்லாம் எங்கு போய்த் தெரிந்து கொள்வது என்று ஆதங்கப்படுகிறீர்களா? ஒரே முயற்சியில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து ரன் விண்டோவில் சி.எம்.டி. (CMD)என டைப் செய்திடவும். உடனே டாஸ் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே டிரைவின் பெயருக்குப் பின்னால் கர்சர் உங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கும்.

WWW.RAMANABLOG.CO.CC
 

அங்கே Systeminfo என்று டைப் செய்து என்டர் தட்டவும். சிறிது நேரம் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஒவ்வொன்றாக வரிசையாகக் காட்டப்படும்.

Post Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com