Latest

 

Tuesday, 9 February 2010

Live CD என்றால் என்ன?

0 comments

லைவ் சிடி அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக் கொண்ட ஒரு சிடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக் கூடிய வசதியை அளிக்கிறது லைவ் சிடி.

ஒரு லைவ் சீடியை சிடி ரொம் ட்ரைவில் அடையாளம் காணும் கணினி ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பதிலாக சிடியிலுள்ள இயங்குதளத்திலேயே கணிணி பூட் செய்ய ஆரம்பிக்கும். லைவ் சிடியிலிருந்து கணினி இயங்க அரம்பித்ததும் எமது விருப்பப்படி கணினியில் வலம் வர முடியும். அதிலிருந்தே மீண்டும் கணினியில் நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குத் திரும்ப வேண்டுமானால் சிடி ட்ரைவிலிருந்து லைவ் சிடியை அகற்றி விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.

லைவ் சிடி எம்ககுப் பல வழிகளில் பயன்படுகிறது. ஒரு புதிய இயங்கு தளம ஒன்றைக் கணினியில் நிறுவ ஹாட் டிஸ்கில் இடம் ஒதுக்கவோ அல்லது அதற்கு நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியமோ இல்லை அதனை கணினியில் நிறுவாமலேயே இயக்கிப் பார்க்கக் கூடிய வசதியைத் தருகிறது.. லைவ் சிடி.

ஹாட் டிஸ்கில் நிறுவியிருக்கும் இயங்கு தளம் செயற்பட மறுக்கும்போது ஒரு லைவ் சீடியை பயன் படுத்தி எமது பணிகளை மேற்கொள்ள முடிகிறது.

குறிப்பாக உபுண்டு போன்ற லின்க்ஸ் இயங்கு தளத்தின் பல பதிப்புகள் word processor, spreadsheet program, graphics editor, Web browser போன்ற பல்வேறு பயன்பாட்டு மென்பொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. .இதன் மூலம் கணினிப் பயனர்கள் ஒரு லைவ் சிடியை எந்தவொரு கணினியில் இட்டும் ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பாதிப்புகள் வராமல் தமது பணிகளை மேற்கொள்ள முடியும்.

லைவ் சிடியை ட்ரைவிலிட்டதும் கணினி பூட் ஆகாமல் மறுபடியும் ஹாட் டிஸ்கிலிருந்தே இயங்க ஆரம்பித்தால் BIOS இல் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் கணினி பூட் ஆக ஆரம்பிக்கும் போதே டெல் விசையை அழுத்தி பயோஸ் செட்டப்பில் நுளைய வேண்fடும். (எனினும் இது கணினிக்குக் கணினி வேறுபடலாம்.) அங்கு கணினியிலுள்ள பூட் சாதனங்கள் படியலில் சிடி ட்ரைவை முதல் பூட் சாதனமாகத் தேர்ந்ததெடுக்க வேண்டும். பயோஸில் செய்யும் இந்த மாற்றத்தை கணினியில் சிக்கலை ஏற்படுத்தாதவாறு சேமித்துக் கொள்ள முடியும்.. ஒரு லைவ் சிடி ட்ரைவில் இல்லாத போது கணினி ஹாட் டிஸ்கிலிருந்தே பூட் ஆக ஆரம்பிக்கும்.

அனேகமாக லினக்ஸ் இயங்கு தளத்தின் பல்வேறு பதிப்புகள் லைவ் சிடி வடிவில் கிடைக்கின்றன. இவற்றை இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அல்லது இந்த சிடிக்களை தபாலில் வரவழைத்துக் கொள்ளவும் முடியும். லினக்ஸ் தவிர Mac OS, Microsoft Windows, SunJava Desktop. OpenBSD எனப் பல்வேறு இயங்கு தளங்கள் லைவ் சிடி வடிவில் கிடைக்கின்றன. இவற்றுள் ஏதோவொரு லைவ் சிடியைக் கைவசம் வைத்திருப்பது ஹாட் டிஸ்கில் இருந்து கணினி பூட் ஆக மறுக்கும் சந்தர்ப்பங்களில் நமக்குப் பயன்படும்.


Post Comment

Thursday, 4 February 2010

பழுதடைந்த CD / DVD களை இயக்க, DVD படத்தை வெட்டியெடுக்க

0 comments
மென்பொருள் உலகில் தகவல்களைப் பராமரிப்பதற்கு அடிக்கடி நகல் எடுத்துவைத்துப் பயன்படுத்துகிறோம். அப்படி நகல் எடுத்து வைப்பதற்கும், படி எடுப்பதற்கும் CD / DVD களைப் பயன்படுத்துகிறோம்.



குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவற்றில் பழுதேற்பட்டு 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட CD / DVD களைப் பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.



கணினியில் இவற்றை இயக்கிப் பார்க்கவும் இயலாமல் போகிவிடுகிறது.



இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன்மூலம் பழுதடைந்த CD / DVD களிலில் ஏற்றப்பட்ட தகவல்களை மீட்பதற்கும் வழியுண்டு.



http://www.aivsoft.com/downloads/badcdreader/BadCDDVDreaderSetup.exe



DVD Cutter என்பது ஒரு எளிய சிறிய மென்பொருள். ஒரு DVD யில் ஏற்றப்பட்டுள்ள படக் கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நமது கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.



DVD Cutter மூலம் ஒரு .VOB கோப்பின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்து தனியாகப் பதிவு செய்திட இயலும்.

ஒரு முழுநீளத் திரைப்படத்தில் இருந்து குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சியையோ, அழகான காதல் காட்சியையோ, நகைச்சுவையையோ கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருள் உதவும்.

http://www.aivsoft.com/downloads/dvdcutter/dvdcutterSetup.exe


Post Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com