இணையத்தில் உங்கள் கொம்ப்யூட்டர் பயன் பாட்டினை எளிதாக்க ரோபோ ஒன்று கிடைக்கிறது. இந்த ரோபோ என்ன செய்கிறது என்று பார்த்தால் பல ஆச்சர்யமான செயல்களை நொடியில் செய்து விடுகிறது.
கொம்ப்யூட்டரில் சர்ச் வசதி இருந்தும், சில வேளைகளில் நம்முடைய விருப்பப்படி வேகமாக தேடுதல் வேலையை மேற் கொண்டு நாம் விரும்பும் பைல்களையும், புரோ கிராம்களையும் எளிதில் பெற இயலவில்லை. இதற்கு
காரணம், All Programs வதியை பயன்படுத்தி நாம் விரும்பும் புரோகிராமினை இயக்குவது கடினமாகிறது.
இந்த சிக்கல்களைத் தீர்க் கும் வகையில் நமக்கு உதவிட இலவசமாக ஒரு ரோபோ இணையத்தில் கிடைக்கிறது. இதனை Find and Robot எனப் பெயரிட்டு அழை க்கின்றனர்.
இந்த ரோபோ வினை இன்ஸ்டால் செய்துவிட்டால் சிறிய சர்ச் பாக்ஸ் ஒன்று தருகிறது. இதில் நாம் தேடும் பைலின் பெயர் அல்லது அவ்வகையில் ஏதேனும் ஒரு குறிப்பை தந்துவிட்டால் அது கொம்ப்யூட்டரில் தேடி நாம் இயக்க விரும்பும் பைலை எடுத்துத் தருகிறது.
உதாரணமாக, இந்த ரோபோ வினை இன்ஸ்டால் செய்து Windows Update என டைப் செய்தால், அதை முடிக்கும் முன்னரே இந்த அப்ளி கேஷன் புரோகிராம் எங்கிருக்கிறது என காட்டப்படுகிறது.
உடனே அதில் டபுள் கிளிக் செய் தால் விண்டோஸ் ஒஃப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திட முடிகிறது.
இந்த இல வச புரோகிராமினை பெற என உள்ள தளத்திற்கு செல்லவும்
0 comments:
Post a Comment