Latest

 

Thursday, 7 January 2010

எக்ஸ் பி பாஸ்வேர்டை மீண்டும் அமைத்திட


இன்டர்நெட்டில் உலா வருகையில் குறிப்பிட்ட தளம் ஒன்றுக்கான பாஸ் வேர்டினை மறந்துவிட்டீர்கள். இதனை அந்த தளத்திடம் தெரிவித்தால் உடனே அந்த தளம் நீங்கள் குறிப்பிட்ட கேள்விக்கு அளித்த பதிலைத் தந்து பின் அதற்கான விடை யையும் குறிப்பிட்டு அதிலிருந்து மறந்து போன பாஸ்வேர்டை நினைவிற்குக் கொண்டு வர உதவுகிறது



ஆனால் எக்ஸ்பியில் கொடுத்த பாஸ்வேர்டை மறந்துவிட்டால் இது போன்ற கேள்வி பதில் எல்லாம் இருக்காது. அப்படியானால் மறந்துவிட்டால் அவ்வளவுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விண்டோஸ் எக்ஸ்பியில் கொடுத்த பாஸ்வேர்டை மீண்டும் ரீசெட் செய்திடும் வழிகள் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.


1. எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பாஸ்வேர்டை மறந்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டரை நிறுத்தி மீண்டும் Safe Mode ல் ரீ பூட் செய்திடுங்கள். இதற்கு ரீபூட் செய்தவுடன் எப்8 கீயை விட்டு விட்டு தட்டுங்கள். சிறிது நேரத்தில் ஒரு மெனு கிடைக்கும். அதில் SafeMode ல் கம்ப்யூட்டரை பூட் செய்திட ஓர் ஆப்ஷன் கிடைக்கும்.Safe Mode ஐத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டி கம்ப்யூட்டர் பூட் ஆவதைப் பாருங்கள்.


2. லாக் இன் ஸ்கிரீன் கிடைக்கும். இதில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்டில் நுழையவும்.


3. டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் SafeMode ல் இயங்குவது உறுதி செய்யப்படும். இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் ஜஸ்ட் ஙுஞுண் என்பதைத் தட்டவும். உங்கள் கம்ப்யூட்டர் திரையின் ரெசல்யூசன் சிறிது தெளிவற்ற தன்மையில் இருக்கும். கவலைப் பட வேண்டாம்.


4. அடுத்து File, Control Panel திறக்கவும். பின் அதில் User Accounts என்பதில் கிளிக் செய்து திறக்கவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து அக்கவுண்ட்களும் காட்டப்படும்.


5. இப்போது எந்த அக்கவுண்ட்டிற்கு பாஸ்வேர்ட் நீக்கப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Remove the Password என்று உள்ள லிங்க்கை நீக்கவும்.


6. இறுதியாக நீங்கள் புதிய பாஸ்வேர்ட் அமைக்கப்போவதாக இருந்தால் Create a Password என்ற லிங்க்கைத் தேர்ந் தெடுக்கவும். இங்கு பாஸ்வேர்ட் அமைப் பதாக இருந்தால் அமைத்துவிட்டு பின் அதனை பத்திரமாக நினைவில் வைத்துக் கொள்ளும் இடத்தில் எழுதி வைக்கவும்.

Post Comment

1 comments:

Anonymous said...

THANKS 4 THIS NEWS. VERY VERY USEFUL NEWS..

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com