Latest

 

Sunday 1 April 2012

Google +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி



மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான Google +ல் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர்.Google +ல் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் support  செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும்.
Google + தவிர வேறு எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.
Google +ல் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo click செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது click  செய்யுங்கள்.

அடுத்து இன்னொரு window open ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை type செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் type செய்யலாம்.

வலது புறத்தில் உள்ள T என்ற link click செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save button அழுத்தி வரும் window-வில் Share செய்து விடலாம்.
போட்டோவில் தமிழில் watermark சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். Watermark சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

alt

Post Comment

0 comments:

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com