

Software Keyloggers(மென்பொருள் கீலொக்கர்)
இவை மென்பொருள்களின் மூலம் உங்கள் கீபோர்டில் தட்டப்பட்ட விசைகளை ஒரு கோப்பாகசேமித்து அதில் முன்னரே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடும்.
பிரபலமான WideStep Keylogger இற்கான டொரன்ட்கோப்பை தரவிறக்க...
நான் இன்னும் இதை பயன்படுத்திபார்க்கவில்லை. விரும்பினால் உங்கள் கணணியில் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்.(இப்படிச் சொன்னால் கேட்கவா போறீங்க?)
ஆனால் உண்மையிலேயே உங்கள் கைவரிசையை காட்ட விரும்பினால் நீங்களே உங்களுக்குரிய கீலொக்கரை உருவாக்குவதுதான் சிறந்தது. (அதற்கு கொஞ்சம் கணணிமொழியறிவு இருந்தால் போதும்.)
கீலொக்கரிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொளவது எப்படி?
கீலொக்கரிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள பின்வரும் வழிமுறைகளைபயன்படுத்தலாம்.
- உங்கள் கணணியில் Firewall செயற்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் கீலொக்கர்கள்இணையத்தின் வழியே தகவல் அனுப்புவதை ஓரளவு தடுக்கலாம், ஆனால்முழுமையான பாதுகாப்பினை தராது.
- சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் கீலொக்கர்கள் பின்புறத்தில் வேலைசெய்துகொண்டிருப்பதை கண்டுபிடிக்கும் ஆற்றலை கொண்டிருக்கும்,என்னைப்பொறுத்தவரை Kaspersky Internet Security, Bitdefender Internet Security, Bitdefender Total Security போன்றன ஓரளவு கீலொக்கரிடமிருந்து பாதுகாக்கும்.

- Crack செய்யப்பட்ட மென்பொருட்கள், முக்கியமாக டொரண்டிலிருந்துதரவிறக்கப்படும் மென்பொருட்களில் கீலொக்கர்கள் மறைந்திருக்க அதிகவாய்ப்பு உள்ளது, எனவே முடிந்தவரை அதனை தவிர்க்கவும்.
- பொது இடங்களில் கடவுச்சொல்லை தட்டச்சு செய்ய On-Screen கீபோர்டினைபயன்படுத்துங்கள், ஆனால் சில மென்பொருள் கீலொக்கர்கள் On-Screenகீபோர்டுகளில் தட்டச்சு செய்யப்படுவற்றையும் கண்டுபிடித்து விடும்.
- நெட்வொர்க் மானிட்டரிங் மென்பொருட்களை நிறுவி கண்கானிப்பதன் மூலம்கீலொக்கர்கள் இணையத்தில் தொடர்பு கொள்வதை கண்டுபிடிக்கலாம்.
நன்றி :- குருசெச்திரம்