Friday, April 11, 2025

Latest

 

Sunday, 19 February 2012

புதிய தொழில் நுட்பத்தை லேப்டாப்பில் புகுத்தும் ASUS


Graphics processing Unit கொண்ட லேப்டாப்புகள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. அதனால் இப்போது நிறைய நிறவனங்கள் இந்த வகையான Tablet மற்றும் லேப்டாப்புகளைத் தயாரிப்பதில் மிகத் தீவரமாக இருக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட டிவைஸ்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த softwares தேவைப்படும்.

மிகவும் சக்தி வாய்ந்த டிவைஸ்களைப் பார்த்தால் ஆசஸை மறக்க முடியாது. ஏனெனில் Asus Transformer Prime ஒரு மிகவும் சக்தி வாய்ந்த டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் நடுத்தர மற்றும் உயர் தர கேம்களை support செய்கிறது. தற்போது கேமிங் வசதியை முழுமையாக சப்போர்ட் செய்யும் புதிய நோட்புக்கைத் தயாரிக்க இருக்கிறது Asus. அந்த நோட்புக்கில் மைக்ரோசாப்ட்டின் connect motion sensing controller என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த இருக்கிறது.


குறிப்பாக புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் Asus பல முறை வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக லேப்டாப்பில் என்விடியாவின் 3D vision sensor பயன்படுத்துவது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால் அதை தனது நோட்புக் பேசிலில் மிக எளிதாகப் பயன்படுத்தியது.


ஆகவே இப்போது Asus connect தொழில் நுட்பத்தை தனது நோட்புக்கில் பயன்படுத்த இருக்கிறது. குறிப்பாக தனது பேசில் நோட்புக்கில் உள்ள கண்ட்ரோலரில் உள்ள கேமரா மற்றும் சென்சார்களை அகற்றி விட்டு இந்த புதிய தொழில் நுட்பத்தை இணைக்க இருக்கிறது. எனவே வரும் புதிய டேப்லெட் நிறைய சென்சார்களோடு மிகவும் ஸ்டைலாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் Asus-ன் லேப்டாப்பில் அருமையாக கேம் விளையாடலாம்.

Post Comment

0 comments:

Post a Comment

Pages (94)1234 Next

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com