Latest

 

Sunday, 11 September 2011

Google தேடலில் குறுக்கு வழிகள். Don't waste your time!!!!!!!!


www.ramanablog.co.cc
ஏதாவது ஒரு பாடல் திடீரென்று ஞாபகம் வருகிறது. உடனே Downlaod செய்து கேட்க தோன்றுகிறது. சாதரணமாக நீங்கள் Google இல் தேடினால் 7,8 பக்கங்களை காட்டி பின்னர் Downlaod லிங்க் இல்லாமல் ஏமாற்றமே கிடைக்கின்றது. விருப்பமான இனிமையான எந்த ஒரு பாடலையும் 2 கிளிக்கில் Download செய்ய முடிந்தால்

அதுவும் முடியும் கூகிள் துணையுடன். அதற்கு பின்வரும் முறையை கையாளுங்கள்.

பாடல்களை இலகுவாக தேடிப்பெறுவதற்கு கீழுள்ள Code ஐ copy paste செய்யுங்கள். பாடலின் பெயரை அல்லது பாடியவரின் பெயரை ஆங்கிலத்தில் இந்த இடத்தில் இணைத்து, Google இல் Enter செய்ததும் உடனே அந்த பாடல்கொண்ட தளம் நேரடியாக Downlaod லிங்குடன் காட்டப்படும். உடனே Download செய்து இசையை ரசிக்கலாம்.

"parent directory" mp3 OR wma OR ogg OR wav Mankatha -html -htm -download -links

இதுபோல பல நாடுகளின் நேர வித்தியாசத்தை அறிந்து கொள்ள அந்த நாட்டு பெயருடன் Time என்று சேர்க்க வேண்டும். Eg India Time . நாணய மாற்று வீதங்களை அறிய நாட்டு குறியுடன் பின்வருமாறு இணைக்க வேண்டும் 100 USD in INR. இதன் பதில் இவ்வாறு கிடைகும்.

மிக கடினமான கணக்குகளுக்கு பின்வரும் முறையில் இலகுவாக விடைகளை கூகுள் தரும். Eg 100+100 

மேலும் ஏதாவது தொழில்நுட்ப விடயமோ அல்லது வேறு ஒரு சிக்கலான விடயத்துக்கு பதில் கிடைக்க வேண்டுமெனில் அதற்கு ஏற்றது போல ஆங்கில் சொற்றொடர்களை இணைத்து அதனுடன் Forum மற்றும் Blog என்று இணைத்து தேடினால் அதைப்பற்றி விவாதித்த பக்கங்களை கூகுள் தரும். உதாரணமாக "தமிழில் எழுதுவது எப்படி" என்று தனியே தேடுவதை விட அதனுடன் forum OR blog என்று தேடும் போது துல்லியமான பதிலைப் பெறலாம். கூகிளை பயன்படுத்தும் குறுக்கு வழிகள் தெரிந்தால் எந்த தேடலுக்கும் பதில் கிடைப்பது சாத்தியமே.

Post Comment

1 comments:

Mohammed Nowshath on 12 September 2011 at 04:41 said...

பயனுள்ள பதிவு சகா ! !

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com