Latest

 

Wednesday, 9 February 2011

பைல்களைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திட....


நாம் கையாளும் தகவல்கள் பல நமக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்க வேண்டும் என பல நிலைகளில் நாம் முடிவெடுக்கிறோம். ஆனால் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் நம் தகவல்களை எப்படி பாதுகாப்பாகப் பிறர் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

இது போன்ற மறைத்து வைக்க வேண்டிய செயலை மேற்கொள்ள பல சிறிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை தேர்ட் பார்ட்டி புரோகிராம் என அழைக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது நூறு சதவிகிதம் பாதுகாப்பு எனச் சொல்ல முடியாது.



எனவே விண்டோஸ் இயக்கம் தரும் பாதுகாப்பு வழியை இங்கு காணலாம்.இந்த செயலை மேற்கொள்ள நமக்கு கிடைக்கும் கட்டளை Attrib என்பதாகும். இந்த சொல் ஒரு பொருளுக்கு நாம் அமைக்கும் பண்பினைக் குறிக்கிறது. இங்கு ஒரு பைலுக்கு நாம் அளிக்கும் பண்பே அது. படிக்க மட்டும், மறைத்து வைக்க மற்றும் சிஸ்டம் பயன்படுத்த (Read only, Hidden and System attributes) என மூன்று வகைகளில் பொதுவாக பண்புகளை கொடுக்கலாம்.

கீழ்க்காணும் வழிகளில் செயல்பட்டு உங்கள் போல்டருக்கு இந்த பண்புகளை அளிக்கலாம். இதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக் இன் செய்திருக்க வேண்டும். இனி மறைக்க வேண்டிய தகவல் உள்ள பைல்களை அடைத்து வைக்க ஒரு புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.

எடுத்துக்காட்டாக D ட்ரைவில் Data என ஒரு போல்டரை உருவாக்கலாம். இதில் அனைத்து பைல்களையும் கொண்டு வரவும். மறைக் கப்பட வேண்டிய இந்த பைல்களுக்கு காப்பி பைல்கள் வேறு எங்கும் இருக்கக் கூடாது.

 பின் Start பட்டன் அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி (command prompt) கிடைக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய போல்டரை மறைத்து வைத்திட வேண்டும் என்று திட்டமிடுகின்ற போல்டரின் பெயரை அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். இங்குள்ள எடுத்துக் காட்டின்படி அந்த கட்டளைச் சொற்கள் “attrib+s+h D:\Data” என இருக்க வேண்டும். (மேற்கோள் குறிகள் டைப் செய்யப்படக் கூடாது) இந்த கட்டளை உங்கள் Data போல்டரை D டிரைவில் மறைத்து வைத்திடும்.

உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். இவ்வாறு மறைத்து வைத்திருப்பதை “Show hidden files and folders” என்ற கட்டளை கொடுத்தெல்லாம் பார்க்க முடியாது. சரி, மறைத்து வைத்துவிட்டீர்கள். என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு நேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம். அல்லது மேலும் சில பைல்களை இதன் பின் மறைத்து வைக்க எண்ணி இந்த போல்டரில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது “attrib s h D:\Data” என டைப் செய்திட வேண்டும்

Post Comment

2 comments:

S.முத்துவேல் on 10 February 2011 at 05:22 said...

நல்ல தகவல்..

RAMANA on 10 February 2011 at 15:56 said...

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com