Latest

 

Sunday, 21 November 2010

விண் XP கீ எளிதாக பெறுங்கள்!!!!!!!

0 comments
altவிண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்குபவர்கள், இதற்கான மைக்ரோசாப்ட் சிடியினை வைத்துப் பதிந்து இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவர்கள் தங்கள் நிறுவன சிடி, நகல் எடுத்த சிடி என எதனையாவது தந்திருக்கலாம்.


நிறுவன சிடிக்களில் அதன் டப்பாக்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அச்சிடப்பட்டு தரப்பட்டிருக்கும். காலப் போக்கில் இந்த டப்பா காணாமல் போகும்; அல்லது வைத்த இடம் மறந்து போகும். என்றாவது சிஸ்டம் கிராஷ் ஆகி, ஹார்ட் டிஸ்க் ரீ பார்மட் செய்து, சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடுகையில் தான் ப்ராடக்ட் கீ இல்லையே என்ற நிலை வரும். அல்லது சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும்.






இந்த தொல்லையிலிருந்து எப்படி மீள்வது? ஒரிஜினல் சிடியோ அல்லது ஒரிஜினல் போல காப்பி எடுத்த, நிறுவனங்கள் வழங்கிய சிடியோ இருக்கும் வரை, இந்த ப்ராடக்ட் கீயை அறிந்து கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.alt








1. சிஸ்டம் சிடியை அதன் டிரைவில் செலுத்தவும்.




2. விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் சிடியின் டைரக்டரிகளுக்குள் நுழையவும். அதில் கிடைக்கும் போல்டர்களில் i386 folder என்ற போல்டரைத் திறக்கவும்.




3. அங்கு unattend.txt என்ற பைலைத் திறந்து அதன் இறுதி வரை செல்லவும்.



4. இறுதியில் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான விண்டோஸ் எக்ஸ்பி
ப்ராடக்ட் கீ இருக்கும்.

Re- TAMILCOMPUTER

Post Comment

Saturday, 6 November 2010

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்

0 comments
altகம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.

* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.

* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும்64 (MB) மீதப்படுத்த முடியும்.

* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…

* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.

* தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)

* இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.

இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்..


Re- Tamilcomputer

Post Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com