Latest

 

Saturday, 4 September 2010

கேள்வி பதில்கள் 2



கேள்வி: என்னுடைய லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்தி வருகிறேன். திடீரென என் வேர்ட் தொகுப்பு டாகுமெண்ட்டில் உள்ள டெக்ஸ்ட்டில் ஸ்பெல்லிங் செக் செய்திட மறுக்கிறது. தனியே டெக்ஸ்ட் எடுத்து காப்பி செய்தும் பயன்படுத்தி பார்த்தேன். எந்த விளைவும் இல்லை. பைல் ஏதேனும் கரப்ட் ஆகியிருக்குமா? மீண்டும் ஆபீஸ் 2003 இன்ஸ்டால் செய்திட வேண்டுமா?

பதில்: நீங்கள் எழுதியுள்ள விரிவான கடிதத்திலிருந்து உங்கள் வேர்ட் தொகுப்பின் செட்டிங்ஸ் மாறியுள்ளது என்று தெரிகிறது. நீங்கள் வேர்ட் டெக்ஸ்ட்டில் ஸ்பெல் செக் செய்திட வேண்டாம் என்று எதனையாவது நீங்கள் அறியாமலேயே மாற்றி இருக்கலாம். அல்லது ஸ்பெல் செக் செய்வதற்கான மொழியினை மாற்றி இருக்கலாம். நீங்கள் ஆங்கிலத்தில் டாகு மெண்ட் அடித்து ஆனால் ஸ்பெல் செக் செய்வதில் பிரெஞ்ச் மொழியினைத் தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும்? கம்ப்யூட்டர் டெக்ஸ்ட்டைப் படித்துப் பார்த்து டெக்ஸ்ட் ஆங்கிலத்தில் இருப்பதனை உணர்ந்து பேசாமல் இருக்கும்.

இதனை நிவர்த்தி செய்திட எந்த டெக்ஸ்ட்டில் அல்லது டாகுமெண்ட்டில் ஸ்பெல் செக் செய்திட வேண்டுமோ அதனை Ctrl+A கொடுத்துத் தேர்ந்தெடுக்கவும். பின் மெனு சென்று Tools | Language | Set Language என வரிசையாகத் தேர்ந்தெடுக்கவும். அங்கு இல்லாமல் வேறு மொழி ஏதேனும் செலக்ட் ஆகி இருந்தால் உங்கள் விருப்பப்படிக்.கு., U.K., அல்லது Canada English ஆகிய ஒன்றில் எதனேயேனும் செலக்ட் செய்திடவும். அதே விண்டோவில் Do not check spelling or grammar என்ற ஆப்ஷனில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்துவிடவும். ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஸ்பெல் செக் தானாக நடைபெறும்.


கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் எர்ரர் ஏற்பட்டால் உடனேயே கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகிறது. இது சில வேளைகளில் தேவைதான் என்றாலும் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் இது போல் ஆகிறது. இதனால் நேரம் வீணாகிறது. அப்போது தயாராகும் பைலின் டேட்டாக்கள் காணாமல் போகின்றன. இது எதனால் ஏற்படுகிறது? நான் பயன்படுத்தும் இன்னொரு கம்ப்யூட்டரில் எர்ரர் ஏற்பட்டால் ரிப்போர்ட் அனுப்பவா என்று கேட்கும். பின் வழக்கம் போல தொடர்ந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கும். குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் மட்டுமே இந்த ரீ ஸ்டார்ட் தொல்லை ஏற்படுகிறது. இதற்கு என்ன வழி?

பதில்: அடிப்படையில் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் அடிப்படை இயக்க பைல் களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே தொடர்பான எச்சரிக்கை களைக்கொடுத்தோ கொடுக்காமலோ கம்ப் யூட் டர் ரீஸ்டார்ட் ஆகும்படி தான் விண்டோஸ்
அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்துள்ள பிரச்னை குறித்து நீங்கள் அறிய உடனே இது போல ரீஸ்டார்ட் செய்வதனை நீங்களே தடுத்து நிறுத்தினால் எர்ரர் எதனால் ஏற்பட்டது என நீங்கள் அறிய உதவிடும்.

இதற்கு உங்கள் விண்டோஸ் செட் அப்பில் கீழ்க் குறிப்பிடும் மாற்றங்களை மேற்கொள்ளவும். My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Advanced என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் Startup and Recovery என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு Settings என்ற பட்ட னைத்தட்டவும். இதில் “Automatically restart” என்ற பிரிவில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும். இனி எர்ரர்கள் ஏற்படுகையில் கம்ப் யூட்டர் ரீஸ்டார்ட் ஆகாது. எர்ரர் களை நீங்கள் என்ன வென்று பார்த்து குறித்துக் கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக் கைகளை எடுக்கலாம்.


கேள்வி: எங்கள் அலுவலகத்தில் பன்னிரண்டு கம்ப்யூட்டர்கள் ஒரு நெட்வொர்க் இணைப்பில் உள்ளன. அதில் நான் பயன்படுத்திக் கொண்டிருந்த கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டரில் உள்ள பைலை இயக்கிக் கொண்டிருந்த போது தவறுதலாக அதனை அழித்துவிட்டேன். அதனைத் திரும்பப் பெற என் கம்ப்யூட்டரிலும் அந்த கம்ப்யூட்டரிலும் உள்ள ரீசைக்கிள் பின்களில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. இதனை எப்படித் திரும்பப் பெறுவது?

பதில் : நெட் வொர்க்கில் இருந்து பைல்களை அழிக்கும்போது அவை ரீசைக்கிள் பின்னுக்குப் போகாது.

நார்ட்டன் யுடிலிட்டி போன்ற சிறப்பு சிஸ்டம் சாப்ட்வேர் மூலம் அழிக்கப்பட்ட பைலை உடனடியாக மீட்க முடியும். கால தாமதமானால் அந்த பைல் இருந்த இடத்தில் வேறு பைல் எழுதப்படலாம். அப்படி எழுதப்பட்டுவிட்டால் மீண்டும் அந்த பைலைப் பெறவே முடியாது.

Post Comment

0 comments:

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com