Latest

 

Saturday, 26 June 2010

கம்ப்யூட்டருக்கு தேவைப்படும் பத்து சிறந்த மென்பொருள்கள்......

7 comments
உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்


1. Free Anti Virus ( AVG )



Download Free AVG Anti Virus
உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு சுவரை ஏற்படுத்தும் மென்பொருள்



2. Free Firewall ( PC Tool )



Downlaod Free PC Tool Firewall


(AVG மற்றும் PC Tool Firewall இரண்டையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்)







உங்கள் கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்க்கு முன்னால் அதன் டிரைவர்களை பேக்கப் எடுத்துவைக்க உதவும் மென்பொருள்



3. Free Driver Backup (DriverMax)



Download Free Driver Max

உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள Mother Board, Processor, Hard Disk, Ram போன்ற ஹார்டுவேர்களை பற்றிய செய்திகளையும் தெரியப்படுத்தும் மென்பொருள்



4. Free CPU Information ( CPU-Z)



Download Free CPU-Z


நீங்கள் இண்டெர்நெட் பார்ப்பதின் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் சேரக்கூடிய தேவை இல்லாத டெம்ப்ரவரி பைல்களை ஒரு நொடியில் அழிக்க உதவும் மென்பொருள்



5. Free PC Cleaner (Ccleaner)



Download Free CCLeaner
உங்கள் கம்ப்யூட்டரில் பி.டி.எப் பைலை (PDF File ) ஓப்பன் செய்து பார்க்க உதவும் மென்பொருள்





6. Free PDF Reader ( ADOBE )



Download Free Adobe Reader


உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட பைல்களை திரும்ப எடுக்க உதவும் மென்பொருள்



7. Free File Recovery ( Recuva )



Download Free Recuva
உங்களிடம் உள்ள ஆடியோ, வீடியோ மற்றும் மென்பொருள்கள் CD - யை காப்பி எடுக்க உதவும் மென்பொருள்



8. Free Burning Studio ( Ashampoo )



Download Free Ashampoo Burning Studio
உங்கள் கம்ப்யூடரில் அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் பார்க்க உதவும் மென்பொருள்

(இந்த மென்பொருளில் View > Advance Control ஆப்சனை செலெக்ட் செய்தால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் தேவையான பகுதியை உங்கள் கம்ப்யூட்டரில் ரிக்கார்ட் செய்துகொள்ளலாம்.)



9. Free Video Player ( VLC )



Download Free VLC Player
உங்களிடம் உள்ள ஆடியோ CD மற்றும் MP3 பாடல்களை கேட்க்க உதவும் மென்பொருள்



10. Free Audio Player (Media Monkey )



Download Free Media Monkey

Post Comment

Saturday, 19 June 2010

அழித்த பைல்களை மீட்க..........

0 comments



கொம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி ஒரு சிக்கல் வரும். தேவையான ஃபைல்களை சில நேரங்களில் நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம்.

அவை ரிசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை பயன்படுத்தி றீ சைக்கிள் பின்னுக்கு செல்லாமல் சில பைல்களை அழித்துவிடுவோம். பின்னர் அதற்காக வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட ஃபைல்களை எடுத்து தருவதற்கு என்று பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாக கொம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது.

அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover files இது கிடைக்கும் தளத்தின் முகவரி

http://www.undeleteunerase.com/download.html


றீ சைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் மீட்டு விடலாம்.

மிகச்சிறிய, ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது.

Post Comment

Sunday, 6 June 2010

ஆன்லைன் வைரஸ் பரிசோதனை(free for u)

0 comments
பிரபலமான ஆண்டி வைரஸ் புரோகிராம் வைத்திருக்கிறேன். அவ்வப்போது இன்டர்நெட்டில் அதன் தளம் சென்று அப்டேட் செய்து வருகிறேன். இருந்தாலும் வைரஸ் வந்துவிட்டதோ என்று எப்போதும் அச்சம் என்று சிலர் புலம்புகின்றனர். சிலரோ இத்தகைய புரோகிராம் இருந்தும் வைரஸ் வந்துவிட்டதே என்று தவிக்கின்றனர். ஏன் இந்த நிலை? எத்தகைய திறன் மிக்க ஆண்டி வைரஸ் தொகுப்பாயிருந்தாலும் சில வைரஸ்களை, குறிப்பாகப் புதியதாக எழுதி உலாவிடப்படும் வைரஸ்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.



இதற்குக் காரணம் வைரஸ்களை உருவாக்குபவர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதுதான். மேலும் பிரவுசர் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களில் ஹேக்கர்கள் நுழையும் வகையில் பல பலவீனமான இடங்கள் இருப்பதுதான். இத்தகைய சூழ்நிலைகளில் நமக்கு உதவ இணைய தளம் ஒன்று செயல்படுகிறது.



உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது பைல் ஒன்றில் வைரஸ் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால் அல்லது டவுண்லோட் செய்யப்படும் அனைத்து புரோகிராம்களையும் நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும் என விரும்பினால் உடனே அதனை இந்த தளத்திற்கு அனுப்பலாம். இந்த தளம் நீங்கள் அனுப்பும் புரோகிராமினை முழுமையாக சோதனை செய்து வைரஸ் இருக்கிறதா எனச் சோதிக்கும்.



ஜஸ்ட் லைக் தேட் சோதிக்காமல் 36 வெவ்வேறு வகையான ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் கொண்டு சோதிக்கும். முடிவுகளை உடனே நமக்கு அறிவிக்கும். இதற்கான கட்டணம் எதுவும் இல்லை. நீங்களும் சந்தேகப்படும் அனைத்து புரோகிராம்களையும் இந்த தளத்திற்கு அனுப்பிப் பார்க்கலாமே.



தற்போது தமிழ் வலைப்பதிவுகளில் நெல்லை தமிழ் திரட்டியால் வழியே வந்த மால்வேர் வைரஸ் பிரச்சினையால் வலைத்தளங்கள் முடக்கப்படுகின்றன. தங்கள் தளங்களிலும் வைரஸ் உடுருவியிருக்குமோ என சந்தேகிப்பவர்கள் தங்கள் வலைப்பதிவுகளை BackUp செய்து இந்த தளத்தில் பரிசோதித்துப் பார்ர்க்கலாம்.



இணையத்தள முகவரி : http://www.garyshood.com/virus/

Any problem contact me: t_tharsikan@hotmail.co.uk

Post Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com