1.Redo WB
2.Leo_Vista WB2
3.Cabin Fever WB
4.Carbon-ite WB
5.Vienna 3 - Rapture
கணினியை ஆரம்பிக்கும்போதே சில எப்லிகேசன்கள் விண்டோஸில் இயங்க ஆரம்பித்து விடும். இதனால் விண்டோஸ் பூட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். விண்டோஸ் ஸ்டாட்-அப்பில் இயங்கும் இந்த எப்லிகேசன்களை நிறுத்தி விடவும் விண்டோஸில் வசதியுள்ளது. அவ்வாறே சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட சில எப்லிகேசன்களும் ஸடாட் அப்பில் அந்த எப்லிகேசனை ஆரம்பிக்கவும் நிறுத்தவும் கூடிய வசதியைக் கொண்டிருக்கும்.. இந்த வசதி சில எப்லிகேசன்களில் இல்லையெனின் விண்டோஸ் இயங்கு தளத்தில் அதனை நிறுத்த வழியுள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
ஸ்டார்ட் பட்டனில் க்ளிக் செய்து Run தெரிவு செய்ய வரும் ரன் பொக்ஸில் MSCONFIG என டைப் செய்து ஓகே சொல்ல ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு Startup டேபில் க்ளிக் செய்து ஸ்டாட் அப்பில் இயங்கத் தேவையற்ற எப்லிகேசன்களின் பெயர்களை நீக்கி விட்டு ஓகே செய்து விடுங்கள். எனினும் இந்த வழி முறை 100 வீதம் வெற்றியளிக்காது ஏனெனில் சில எப்லிகேசன்களை ஸ்டாட் அப்பில் இயங்குமாறே உருவாக்கப்படிருக்கும். அவ்வகையான எப்லிகேசன்களை ஸ்டாட் அப்பில் இயங்காதவாறு செய்தாலும் அந்த எப்லிகேசன்கள மறுபடியும் தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.
Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com