Latest

 

Sunday 1 January 2012

உங்களை நீங்களே அறிந்து கொள்ள..Who am I????


      பாரெல்லாம் பரந்து வாழும் உறவுகள் அனைவருக்கும் எமது புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்




நீ ங்கள் பயன்படுத் தும் கம்ப்யூட்டர் உங்களுடையதுதான். கஷ்டப்பட்டு காசு சேர்த்து அல்லது பாதி கடன் வாங்கி உங்கள் மகன் /மகள் படிக்கவும் நீங்கள் அலுவலக வேலைகளை மேற்கொள்ளவும் வாங்கியது உண்மைதான். அந்த கம்ப்யூட்டரில் என்ன என்ன உள்ளது?

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன? எந்த அல்லது எத்தனாவது சர்வீஸ் பேக் பதியப்பட்டுள்ளது? கம்ப்யூட்டர் உரிமையாளர் என யாருடைய பெயர் உள்ளது? சிஸ்டம் மாடல் பெயர் என்ன? மொத்த மெமரி எவ்வளவு? அதில் பிசிகல் மெமரி எவ்வளவு? விர்ச்சுவல் மெமரி எவ்வளவு/ என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆவல் இல்லையா? இதை எல்லாம் எங்கு போய்த் தெரிந்து கொள்வது என்று ஆதங்கப்படுகிறீர்களா? ஒரே முயற்சியில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து ரன் விண்டோவில் சி.எம்.டி. (CMD)என டைப் செய்திடவும். உடனே டாஸ் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே டிரைவின் பெயருக்குப் பின்னால் கர்சர் உங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கும்.

WWW.RAMANABLOG.CO.CC
 

அங்கே Systeminfo என்று டைப் செய்து என்டர் தட்டவும். சிறிது நேரம் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஒவ்வொன்றாக வரிசையாகக் காட்டப்படும்.

Post Comment

1 comments:

திண்டுக்கல் தனபாலன் on 2 January 2012 at 06:01 said...

தகவலுக்கு நன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com